2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

ஒரே நாளில் 9 பேர் பலி

R.Maheshwary   / 2021 ஜனவரி 03 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 24 மணித்தியாலத்தில் வாகன விபத்துகளால் 9 பேர் காயமடைந்துள்ளனரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 90 விபத்துகள் இடம்பெற்றதுடன் இதில் 9 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன், இவ்விபத்துகளால் 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 221 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை இடம்பெற்ற வாகன விபத்துகளில் 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த காலப்பகுதியில் 149 பேர் காயமடைந்துள்ளதுடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய 2,045 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .