Editorial / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலவ வருட தமிழ்-சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர், அங்கொட ஐ.டி.எச் இல்லை, கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவது மிக வேகமாக அதிகரித்துள்ளது.
“கொரோனா தொற்றாளர்கள் 150 பேர், இன்றையதினம் மட்டும் புதிதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என வைத்திய பணிப்பாளர் வைத்தியர் நிபுணர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார்.
“கடந்த மார்ச் மாதத்தில், வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த மட்டத்திலேயே இருந்தது. எனினும், கடந்த வாரத்தில், தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்து, இரண்டு மடங்காக கூடியது” என்றார்.
இதேவேளை, ஐ.டி.எச் அவசர சிகிச்சைப் பிரிவில், இரண்டொரு தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டுக்குப் பின்னர், தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்த அவர், கடந்த இரண்டொரு மாதங்களுடன் ஒப்பிடுகையில், புத்தாண்டுக்குப் பின்னரான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்துள்ளது என்றார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2026