2026 மே 02, சனிக்கிழமை

’ஒளடத பாணியை விஞ்ஞான ரீதியில் ஆராயவும்’

Editorial   / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 நோயிலிருந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட உள்ளூர் சிகிச்சை முறைகளையும் ஒளடதங்களையும் விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துவதைத் துரிதப்படுத்துமாறு பணித்துள்ள பிரதமர் ராஜபக்ஷ, தடுப்பூசி வகைகளையும் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூர் மருத்துவமொன்றை, கலாநிதி ஹர்ஷ சுபசிங்க, இந்திக ஜாகொட ஆகியோரால் கொவிட்-19 நோயைத் தடுப்பதற்காக, உள்ளூர் மருத்துவ முறைமையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், கேகாலை தம்மிக பண்டார என்ற ஆயுர்வேத வைத்தியரின் ஒளடத பாணியும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பில், விஞ்ஞான ரீதியில் ஆய்வுகளை மேற்கொண்டு, உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தேசிய ஆராய்ச்சி சபைக்கு, பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.

கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் ஒளடத பாணி தொடர்பான ஆராய்ச்சிப் பத்திரமொன்று, ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர்களால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அது தொடர்பான ஆய்வுக்கு இந்நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உடலியல் விஞ்ஞானம் தொடர்பான நிபுணத்துவமிக்க சிரேஷ்ட பேராசிரியர்கள் ஐந்து பேர் மற்றும் தேசிய ஆராய்ச்சி சபைக்காக தேசிய ஆராய்ச்சி சபையின் தலைவர் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹல உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், உலகில் கொவிட்-19 தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி வகைகள் குறித்து ஆராய்ந்து அது தொடர்பிலான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு தேசிய ஆராய்ச்சி சபைக்கு, பிரதமர் இதற்கு முன்னர் அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கொவிட்-19 இற்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த மூன்று தடுப்பூசிகள் தொடர்பான சீ.டீ.ஏ. அறிக்கை தேசிய ஆராய்ச்சி சபையினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .