Freelancer / 2026 மார்ச் 06 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உடனடியாக ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸாரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும், இல்லையெனில் அவர்கள் நிச்சயம் மரணத்தை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், தமது நாடு தற்போது போரின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். R
4 minute ago
14 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
40 minute ago