Editorial / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பொத்துவில் ஒஸ்மானியா வித்தியாலய கட்டடத்தின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை (16) இரவு இடிந்து விழுந்துள்ளது.
விடுமுறையின் பின் பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பாடசாலையில் கற்றல் நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். தரம் 5 வரை உள்ள இந்த பாடசாலையில் 237 மாணவர்கள் கற்று வருகின்றனர்.
மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய தற்காலியமாக குறித்த இன்று (17) பாடசாலை மூடப்பட்டுள்ளது. என கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.ஹம்ஸா தெரிவித்தார். இருந்த போதிலும் பாடசாலையின் ஆசிரியர், ஆசிரியைகள் வருகை தந்திருந்தனர்.
இக் கட்டடத்தில் 10 வகுப்பறைகள் உள்ளன, இவ் வகுப்பறை கட்டடம் சுமார் 73 ஆண்டு பழமையானதாகும் இது பொத்துவில் மத்திய கல்லூரியில் இருந்து ஒஸ்மானியா கனிஷ்ட வித்தியாலயத்திற்கு பிரிக்கப்பட்ட ஒரு தொகுதியாகும்.
இந்தக் கட்டடத்தில் 2015 ஆம் ஆண்டு ஒஸ்மானியா கனிஷ்ட வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு இது வரை இந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இப்பகுதி நிலம் சதுப்பு தன்மையுள்ளது என குறிப்பிடப்படுகிறது இதன் காரணமாக கூட கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
18 minute ago
24 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
1 hours ago
2 hours ago