2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஓரளவு மழை பெய்யும்

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டில் ,வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வானிலை அவதான நிலையம் இன்று அறிவித்துள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும்
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு கடற்பரப்புகளில் சிறிதளவான மழை பெய்யக் கூடும் என்றும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .