2025 மே 01, வியாழக்கிழமை

“ஓர் அரசாங்கமாக, அவர்களுக்கு நீதி வழங்கப்படும்” பிரதமர்

Freelancer   / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு உயிரின் கண்ணியத்தையும் பாதுகாத்து, அனைவருக்கும் சமத்துவம் மற்றும் நீதியின் எதிர்காலத்தை நோக்கி உழைப்பதன் மூலம், வலிமையுடனும் ஒற்றுமையுடனும் முன்னேற வேண்டும் என உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார். 
 
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த கொடூரமான சம்பவத்தின் இருண்ட நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கவில்லை. 
 
இன்று, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், வலி இன்னும் நீடிக்கிறது, தாக்குதல் தொடர்பில் விசாரித்து, தடையின்றி, தாமதமின்றி அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணரத் தங்களது முயற்சிகளுக்குத் தொடர்ந்தும் முன்னுரிமையளிக்கப்படுவதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார். 
 
பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்குப் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் உண்மையான நீதி ஆகியவை அவசியம். 
 
ஓர் அரசாங்கமாக, அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தமது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .