2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கிண்ணியா சுற்றுலா நீதிமன்றம் 80 களில் மூடப்பட்டது

Kanagaraj   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேசத்தில் இயங்கிவந்த சுற்றுலா நீதிமன்றம், பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக, 1980 காலப்பகுதிகளில் மூடப்பட்டது என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், 'அந்த நீதிமன்றச் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். நீதிமன்ற வளாகத்துக்கு 40 பேர்ச் காணி தேவைப்பட்டுள்ளது.

அக்காணியை பெற்றுக்கொள்வதில், பெரும் சிரமமாக இருக்கின்றது. காணியை பெற்றுக்கொண்டதன் பின்னர், நீதிமன்றத்துக்கான கட்டடம் நிர்மாணிக்கப்படும். கட்டடத்துக்கான காணியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிண்ணியா பிரதேச செயலாளருக்கு பணித்துள்ளோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .