2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் ஆக்கபூர்வ நடவடிக்கைகள்

Thipaan   / 2016 மார்ச் 08 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனோர் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட பிரேரணையொன்று, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால், நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பிரேணையில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'எமது நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய பயங்கரவாத மற்றும் யுத்த சூழ்நிலைகள் காரணமாக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு வகையான கைதுகள் இடம்பெற்றமையை நாம் அவதானித்துள்ளோம். அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, நல்லாட்சியை உறுதிப்படுத்தும் அரசாங்கம் என்ற வகையில் நாம் பொறுப்புடையவர்களாக உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்களின் நன்மை கருதி, ஜனாதிபதியும் பிரதமரும் பல விட்டுக்கொடுப்புக்களுக்கு இசைந்துள்ளமையை இந்த நாடாளுமன்றத்துக்கு எடுத்துரைக்க விரும்புகின்றேன்' என்று அவர் அந்தப் பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X