2025 மே 21, புதன்கிழமை

கைதிகளை விடுவித்தால் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாது

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறைகளில், தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் குற்றஞ்சாட்டப்படாதவர்களை நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை செய்வதன் ஊடாக தேசியப் பாதுகாப்புக்கு எவ்விதமான பங்கமும் ஏற்படாது என்று  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான முழுமையான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் பின்னர் தான், ,வ்வாறான செயற்பாடுகளில் இறங்கினோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'இலங்கைக்கு எதிராக சிற்சில தடைகளைச் சர்வதேச ரீதியில் ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதுமட்டுமன்றி சர்வதேச நீதிமன்றத்தை நிறுவி, அதனூடாக கேள்விக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான தருணத்திலேயே, புதிய கொள்கையின் அடிப்படையில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ,வ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தற்போது முயற்சி மேற்கொள்ளும் சூழ்நிலையில், ,வ்விடயத்தைத் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் என சிலர் பிரசாரம் செய்கின்றனர். எனினும், ,தனால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சறுத்தலும் ஏற்படாது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் 204 பேர், சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 56 பேர் குற்றவாளிகள், 124 பேருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் பலர், முன்னைய அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வது முதல்தடவையல்ல.

இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் ஜனவரி மாதம் 22ஆம் திகதி, அன்றைய சட்டமாஅதிபர் மொஹான்

பீரிஸின் கையொப்பத்துடன் அரசியல் கைதிகள், ,ரு தடவைகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் தற்கொலை குண்டுதாரி ஒருவரும் அடங்கியிருந்தார். அதனால், தேசியப்பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் ஏற்படவில்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X