2025 மே 21, புதன்கிழமை

கைத்துப்பாக்கி கைப்பற்றிய விவகாரம் பாதுகாப்பை சோதிக்கும் நடவடிக்கை

Thipaan   / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லும் நேரத்தில், கைத்துப்பாக்கியொன்றுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர், சிவில் விமான சேவைகள் அதிகாரசபையைச் சேர்ந்த ஒருவர் என அறிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்வதற்காகவே குறித்த நபர் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. காலில் துப்பாக்கியொன்றைக் கட்டியிருந்த அவர், விமானங்கள் நிறுத்தப்படும் இடத்தை நோக்கிச் செல்வதற்கு முயலும் போது, கைது செய்யப்பட்டிருந்தார்.

 விமான நிலைய ஊழியர் ஒருவர் போன்றே அவர், சென்றிருந்தார். ஆனாலும், அவரது காலில் கட்டப்பட்டிருந்தது போலிக் கைத்துப்பாக்கியே என வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நபர், விமான நிலைய ஊழியரன்று எனவும், சிவில் விமான சேவைகள் அதிகாரசபையால் அனுப்பப்பட்டவர் என வெளிப்படுத்தியுள்ளார்.

விமான நிலையத்தின் பாதுகாப்பு, சர்வதேச மட்டத்தில் காணப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு, இவ்வாறான சோதனைகள் நடாத்தப்படுவதாக, சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகர் எம்.எம்.சி நிமலசிறி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .