2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

காதலர்களின் சடலங்கள் மீட்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை உகன, ஹிமிதுராவ பகுதியில், முச்சக்கரவண்டியொன்றிலிருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரது சடலங்களை புதன்கிழமை (30) மீட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இங்கினியாகல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆணும் முல்லேரியாப் பகுதியைச் சேர்ந்த பெண்ணுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்காதல் காரணமாக இவ்விருவரும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் அம்பாறை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X