2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கே.பிக்கு எதிரான மனுவை விசாரிப்பதற்கு தீர்மானம்

Kanagaraj   / 2016 மே 10 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எஸ்.செல்வநாயகம்

கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைதுசெய்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்க வேண்டுமெனக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோர் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனுவை, ஜே.வி.பி.யே தாக்கல் செய்திருந்தது. அம்மனுவைப் பரிசீலனைக்கு உட்படுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம், அம்மனுவை  மே மாதம் 30 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு, நேற்றுத் திங்கட்கிழமை(09) தீர்மானித்தது.

இந்த மனு, நீதியரசர் பத்மன் சூரசேனவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அவர், இந்த மனுவை அடிப்படையாகக் கொண்டு வழக்கைத் தொடர்வதா இல்லையா எனத் தீர்மானிக்க வேண்டுமெனக் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான குமரன் பத்மநாதனின் (கே.பி) நடவடிக்கைகள் தொடர்பான விசாரணை பற்றிய முன்னேற்ற அறிக்கையைச் சட்டமா அதிபர், பெப்ரவரி மாதம் 03ஆம் திகதியன்று சமர்ப்பித்திருந்தார்.

மனுதாரர்கள் சார்பில், சட்டத்தரணிகளான உபுல் குமார பெருமவுடன் சுனில் வட்டகல, கௌசல்யா பெரேரா, ஜயந்த தெஹியத்தாகே, ஹெஷாண ஜயசூரிய ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X