2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

குற்றச்சாட்டை மறுக்கிறார் சேனாதிபதி

Kanagaraj   / 2016 மே 11 , மு.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடங்களிலும் சமூக ஊடக இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளதன்படி,தன்னுடைய பணம் பனாமாவில் கிடையாது என , அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி தெரிவிக்க விரும்புவதாக, அவரது சட்டத்தரணி நிஷான் பிரேமரத்ன நேற்றுத் தெரிவித்தார்.

அத்தோடு, அவன்ட் காட் மரிடைம் தனியார் நிறுவனத்தின் மூலம் தனது கட்சிக்காரர் உழைத்த பணம் அனைத்துமே, வெளிநாட்டுப் பணத்திலேயே பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 'ஊடகங்களால் தெரிவிக்கப்படுவதன்படி, எனது கட்சிக்காரரின் பனாமா கணக்குகளில் ஒரு டொலராவது காணப்பட்டால், அதை அவர் நிறுவுநரிடம் அன்பளிப்பாக வழங்குவார்' என அவர் தெரிவித்தார்.

அரச பதவிகளை வகித்தவர்கள், பனாமா கணக்குகளை வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டால், அவர்கள் முக்கியமாக விசாரணைக்குள்ளாக்கப்பட்டு, அவர்களது வருமானத்தின் வழிவகைகள் குறித்து அறியப்பட வேண்டுமெனவும், சேனாதிபதி தெரிவித்தார்.

குறித்த பனாமா ஆவணங்களில், பல்வேறான பெயர்கள் காணப்படும் நிலையில், தனது கட்சிக்காரரின் பெயர் மாத்திரம் பெரிதுபடுத்தப்பட்டு, பழித்தூற்றப்படுவது ஏன் எனவும், சட்டத்தரணி பிரேமத்ரன கேள்வியெழுப்பினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X