2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

காலமானார் 'அம்மா' (LIVE updates)

George   / 2016 டிசெம்பர் 05 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

12.09: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சென்னையை வந்தடைந்துள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் ராஜாஜி அரங்குக்கு செல்லவுள்ளார்.


குடும்பத்துடன் ரஜினிகாந் அஞ்சலி

மறைந்த ஜெயலலிதா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா, மருமகன் நடிகர் தனுஷ் மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோருடன் முற்பகல் 11.35 மணிக்கு ராஜாஜி அரங்குக்கு வந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உடலுக்கு ரஜினிகாந்த் உள்பட குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, அங்கிருந்த சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ரஜினிகாந்த், தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.


சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா (68), டிசெம்பர் 5ஆம் திகதி இரவு 11:30 மணிக்குக் காலமானதாக, அவ்வைத்தியசாலையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் உயிரிழந்து விட்டதாக, திங்கட்கிழமை மதியம் முதலேயே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையிலேயே, தற்போது அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

புரட்சித் தலைவி எனவும் அம்மா எனவும் அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் ஜெயலலிதா, இவ்வாண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த போதிலும், டிசெம்பர் 4ஆம் திகதி ஏற்பட்ட இதய நிறுத்தமே, அவரது மரணத்தைத் துரிதப்படுத்தியிருந்தது.


முன்னர் வெளிவந்த செய்தி:

செல்வி ஜெயலலிதா சற்று முன்னர் காலமானதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டச் செய்தியை அப்பலோ வைத்தியசாலை மறுத்துள்ளது.

.ஊடகங்களில் மரணச் செய்தி வெளிவந்தாலும், ஜெயலலிதாவின் மரண் குறித்து தமிழக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை மூலம் தெரியப்படுத்தி வந்தது.

முதல்வர் உடல்நலம் பெற்றுவிட்டதாகவும், விரைவில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் அண்மையில் அறிக்கை வெளியிட்டதால் தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அவசரமாக கூடி ஆலோனை நடத்தினர். தற்காலிக முதல் மந்திரியாக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.

இந்த சூழ்நிலையில், சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் இன்று பிற்பகல் வெளியிட்ட புதிய செய்திக்குறிப்பில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அறிவித்தது. இதனால், அப்பல்லோ வாசலில் கூடி இருக்கும் அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அக்கட்சியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அதேசமயம், முதல்வருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே வெளியிட்ட அறிக்கையிலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்தார்.

எனவே, தொண்டர்களிடையே உள்ள கவலை மேலும் மேலும், உலகின் மிக உயர்ந்த உயிர் காக்கும் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று மாலை 5.15 மணியளவில் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்ததாக செய்தி வெளியானது. இந்த செய்தியைக் கேட்டதும் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் திரண்டிருந்த கட்சியினர் கதறி அழுதனர்.

அப்பலோவின் மறுப்பு ​அறிவிப்பு வெளியானதையடுத்து, கதறியழுத தொண்டர்கள் தற்போது மகிழ்சியடைந்துள்ளனர்.

அரைக்கம்பத்தில் தொங்கவிடப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைய கொடி, மீண்டும் உயரத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

அப்பலோ மறுப்பு

முதல்வர் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்.

​​*முதல்வர் உடல்நிலை குறித்து அறிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அப்போலோ மருத்துவமனை வருகை.

* உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் மூலம் முதல்வருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது: அப்போலோ நிர்வாகம் தகவல்.


  Comments - 0

  • maohan Monday, 05 December 2016 01:22 PM

    விரைவில் நலம்பெற பிரார்த்திக்கின்​றோம்.

    Reply : 0       0

    raja Monday, 05 December 2016 01:23 PM

    அம்மா திரும்பி வருவார்...

    Reply : 0       0

    ranjan Monday, 05 December 2016 01:24 PM

    விரைவில் குணமடைவார்.

    Reply : 0       0

    ranisingam Monday, 05 December 2016 01:25 PM

    பூரண நலம்பெற வாழ்த்துகின்றோம்..

    Reply : 0       0

    Thiyagarajah Vigneswaran Monday, 05 December 2016 10:48 PM

    May her soul rest in peace.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .