2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

குழு மோதலில் மாணவன் பலி

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 25 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிப்பன்ன பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 16 வயதான பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தையடுத்து, ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இக் குழுக்களுக்கிடையேயான கிரிக்கெட் விளையாட்டின் போது அகலப்பந்து (வைட் பந்து) தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து, துடுப்பாட்டத்தினாலேயே குறித்த மாணவன் அடித்துக்கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .