2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கொழும்பில் காசநோய்

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா

காற்றுமூலம் பரவும் காசநோய், தற்போது கொழும்பிலுள்ள சில நகர்ப்பகுதிகளில் பரவி வருவதாக, கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி, டொக்டர் ருவான் விஜேமுனி, நேற்றுத் திங்கட்கிழமை (12) தெரிவித்தார்.

கொழும்பின் வடக்கு பகுதியிலும் மாளிகாவத்தை பகுதியிலும் இந்நோய் பரவி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த வருடத்துக்குள் மாத்திரம் குறித்த பகுதியில் இருந்து 20 காசநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது கடந்த வருடத்தை விட அதிகமான தொகையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்நோய் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு, குறித்த பகுதியிலுள்ள மக்களுக்கு விழிப்புணர்வுகள் வழங்கப்படுவதாகவும் இதற்கான சிகிச்சைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பற்ற தும்மல், ஒருவர் முகத்தில் மற்றொருவர் மூச்சுவிடுவது போன்ற காரணங்களினாலேயே இந்நோய் பரவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காச நோய் என்பது, நுரையீரலை பாதிக்கக்கூடிய நோய் என்றும் உடலில் எந்தவொரு பாகத்தையும் இது தாக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X