Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பௌத்தாலோக மாவத்தை, டுப்ளிகேஷன் வீதி, ஹை லெவல் வீதி மற்றும் நுகேகொடை ஆகிய வீதிகளில், இன்று திங்கட்கிழமை(07) முதல் சாலை ஒழுங்கு, கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.hழும்பில் ஏற்கெனவே அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சாரதிகள், வீதி ஒழுங்குகளைப் பின்பற்றுகின்றார்களா என்பதைக் கண்காணிக்க, பொலிஸ் அதிகாரிகளை மேலதிகமாகக் கடமையில் ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறிப்பாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர வீதியின் ஜயந்திபுரயிலிருந்து கொழும்புவரை, நவம்பர் 26ஆம் திகதி முதல் சாலைச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த நவம்பர் மாதத்தில், சாலைச்சட்டத்தை மீறியமைக்காக, 13,095 சாரதிகளுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago