2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

குழப்பம் விளைவித்த பிக்குகள் நீதிமன்றில் இன்று ஆஜர்

Niroshini   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானாசார தேரரை கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து கடந்த மாதம் ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த நான்கு பிக்குகளையும் இன்று சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணகேர தெரிவித்தார்.

இப்பிக்குகள் நால்வரும் நேற்று வெள்ளிக்கிழமை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

இதேவேளை, எனது கைகள் கட்டப்பட்டுள்ளதாக உணர்கின்றேன் என ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பிரகித் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு மற்றுமொரு இராணுவ உத்தியோகத்தர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X