2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

“கசினோ, கஞ்சா காரர்களாகிவிட்டனர்”

Editorial   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கசினோக்களை அமைத்து கஞ்சாவைப் பயிரிட்டு பொருளாதாரத்தை வளர்க்கப் போவதாக  அன்று அரசாங்கத்தைப் பார்த்து விமர்சித்தவர்கள் இப்போது தங்களின் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைத் திட்டத்திற்குள் கசினோவையும் கஞ்சாவையும் இணைத்துள்ளனர். எங்களை விடவும் அதிகமாக அதனை சமூகத்திற்குக் கொண்டு செல்வதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது  என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனஎம்.பியான  நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (19)  இடம் பெற்ற பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்   இவ்வாறு குறிப்பிட்டார்.

 மேலும்   அவர் பேசுகையில்,

அரச வருமானம் தொடர்பில் கதைக்கின்றனர். அதிகளவில் வரிகளை அறவிட்டு மக்கள் மீது வரிச் சுமைகளைச் சுமத்துகின்றனர். இவ்வாறு மக்கள் மீது வரிகளை அறவிட்டு அரச வருமானம் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர். இந்த வருமானத்தால் மக்களுக்கு என்ன கிடைக்கின்றது. மின் கட்டணத்தைக் குறைப்பதாகவும், உர மானியங்களை வழங்குவதாகவும் கூறினர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

அரிசியும் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. இங்குள்ள விவசாயிகளின் நிலைமை தொடர்பில் அரசாங்கம் தேடிப்பார்ப்பதில்லை. நீங்கள் அதிகரித்த அரச வருமானத்தில் மக்களுக்கு என்ன கிடைத்தது. எதுவும் இல்லை. அன்று எங்களைப் பார்த்துக் கொள்ளையடிப்பதாகக் கூறினர். அது போன்று நாங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில்லை. சில இடங்களில் நடப்பது தொடர்பில் கூடிய விரைவில் தெரியவரும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X