2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்கவும்; ஸ்டாலின்

Freelancer   / 2022 பெப்ரவரி 05 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கவலை வெளியிட்டுள்ளார். 

இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து, இவ்விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்யுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் வலியுறுத்தியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“தமிழ் மீனவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளனர், மேலும் பல தசாப்தங்களாக இந்த பாரம்பரிய நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது தமிழக மீனவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளின் மறுப்பு தெரிவித்துள்ளமை மாநிலத்தில் உள்ள மீனவர் சமூகத்தினரிடையே ஆழ்ந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .