2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கச்சத்தீவுக்கு பக்தர்களை அனுமதிக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

Freelancer   / 2022 பெப்ரவரி 19 , பி.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சத்தீவுக்கு பக்தர்களை அனுமதிக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் தமிழர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, கடிதம் எழுதியுள்ள அவர்  இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும் குறித்த கடிதத்தில், 

தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு கச்சத்தீவு மத ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். பல்வேறு ஆண்டுகளாக அவர்கள் அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த பக்தர்கள் இல்லாமல், அடுத்த மாதம் 11, 12 ஆம் திகதிகளில் அந்தோணியார் தேவாலய திருவிழாவினை நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறிப்பாக தமிழக மீனவர்கள் இடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, தமிழகம் மற்றும் இலங்கையை சேர்ந்த பக்தர்கள் அந்தோணியார் தேவாலய திருவிழாவில் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Image


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X