Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஜூன் 07 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் கொள்கைகள் தொடர்பில் எமக்கு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் பாராளுமன்ற சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற சபை அமர்வுகளுக்கு வருவதற்கு அவருக்கு உரிமை உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.
அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் ஏதுவாக இருந்தாலும்,அவருக்கு வரப்பிரசாதங்கள் இருப்பதால் அது குறித்து கவனம் செலுத்துமாறும்,2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அன்று அப்போது சபாநாயகராக பதவி வகித்த சமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவான தீர்மானத்தை வழங்கியுள்ளதாகவும், அது ஹன்சார்ட் பதிவிடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறும்,கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
56 minute ago
2 hours ago