2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கஞ்சிபான இம்ரான் சிறைக்கூடத்தில் அலைபேசி

Editorial   / 2020 ஜூலை 02 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஞ்சிபான இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து அலைபேசி மற்றும் சிம் அட்டை உள்ளிட்ட சில பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள்  மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து  விசேட தேடுதல் நடவடிக்கையில் நேற்று (01) ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது காஞ்சிபன இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து அன்ரோய்ட் ரக அலைபேசி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிம் அட்டைகள் இரண்டும்  அலைபேசி சார்ஜரும் மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த காலங்களிலும் கஞ்சிபான இம்ரான் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கூடத்தில் இருந்து அலைபேசி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .