Kogilavani / 2017 ஏப்ரல் 09 , பி.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டிகைக் காலங்களில் பயணிகளிடமிருந்து அதிகமாகக் கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
“இதற்கமைய, தனியார் பஸ்களின் கட்டணம் குறித்து 1955 என்ற தொலைபேசி இலக்கத்துக்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களின் கட்டணங்கள் குறித்து 011 7555555 என்ற இலக்கத்துக்கும் அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாட்டை தெரிவிக்க முடியும்” என்று, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.ஜே.ஹேமசந்திர தெரிவித்தார்.
“பண்டிகைக் காலங்களில் அதிகக் கட்டணம் அறவிடுவது தொடர்பாக முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளன. இதற்கமையவே, மேற்படி தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளோம். இதனூடாகப் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு பயணிகளிடம் இருந்து அதிகக் கட்டணம் அறவிடப்படுமாயின், சம்பந்தப்பட்ட பஸ்களுக்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரம் மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்படும்” என்றார்.
“இதேவேளை, தூரப் பயணங்களுக்கு போதுமான பஸ்கள் இல்லாமையால் மாகாண அதிகார சபைக்குச் சொந்தமான பஸ்கள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பஸ்கள் மாத்திரமே விசேட கட்டணங்களை அறவிட முடியும்” எனவும் அவர் மேலும் கூறினார்.
18 minute ago
22 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
51 minute ago
1 hours ago