2025 மே 12, திங்கட்கிழமை

குட்டி தேர்தல் வேட்பாளர்களுக்கான அறிவித்தல்

S.Renuka   / 2025 மே 11 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும், தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டம் எண். 03இன் படி,  எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் தங்கள் பிரசார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் தங்கள் தகவல்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X