2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கொட்டாஞ்சேனை கான்ஸ்டபிள் பஸ்யால விபத்தில் பலி

Janu   / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கண்டி வீதி பஸ்யால முருத்தவல வளைவில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பருடன் மோதியதில் படுகாயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் புதன்கிழமை (24)  அன்று இடம்பெற்றுள்ளதுடன்  , கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய வரக்காபொல மஹேன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய  எஸ்.எம். ருக்மல்  என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

கண்டி நோக்கிச் சென்ற டிப்பர் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, ​​எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

 உள்ளூர்வாசிகளின் உதவியுடன் டிப்பர் வாகன  சாரதி, காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இதன் போது அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .