2025 மே 12, திங்கட்கிழமை

கொட்டாஞ்சேனை மாணவியின் பெற்றோரை சந்தித்தார் பிரதமர்

Simrith   / 2025 மே 11 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோர், விசாரணையை மேற்கொண்ட பொலிஸாருடன், நேற்று (10) பிரதமர் அலுவலகத்தில் விரிவான கலந்துரையாடலுக்காக பிரதமரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் போது, சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக கூறப்படும் பாடசாலை மற்றும் கல்வி வகுப்பில் நடந்ததாகக் சம்பவங்கள் குறித்து விரைவான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

சம்பவம் பதிவான தருணத்திலிருந்து பொருத்தமான நடைமுறைகள் திறம்பட பின்பற்றப்பட்டதா என்பதை மதிப்பிடுவதற்காக கல்வி அமைச்சகம் தற்போது ஒரு உள் விசாரணையை நடத்தி வருகிறது.

அத்துடன், இதுபோன்ற வழக்குகளைக் கையாள பொறுப்பான அரசு நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, ஆலோசகர் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X