2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கட்டுப்பாடுகளை மீறினால் ‘கொரோனா’ மீண்டும் பாயும்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட போதிலும் , போக்குவரத்து கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காவிடின் ​கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க முடியாது என மீண்டும், மீண்டும் வலியுறுத்தியுள்ள, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் கட்டுப்பாடுகளுடன் செயற்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கட்டுப்பாடுகள் தொடர்பில் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதனை அவ்வாறே பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், கொவிட் தடுப்பூசி வழங்கல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஆகியனவற்றால் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை
குறைவடைந்துள்ளன என்றார்.

நாடு, நீண்ட நாள்களுக்கு முடக்கப்படுவதன் மூலம் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் மதிப்பிட முடியாதவை எனத் தெரிவித்த அவர், சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .