2025 மே 09, வெள்ளிக்கிழமை

கட்டாயமாகவுள்ள முன்பருவக் கல்வி

J.A. George   / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என அவர் கூறியுள்ளார்.

தேவையின் அடிப்படையில் இடவசதி உள்ள தொடக்கப் பாடசாலைகளில் முன் குழந்தைப் பருவ மேம்பாட்டு மையங்களை நடத்தலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது, மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் பாடசாலைகளுக்கு தீர்வாக அமையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X