2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கடற்படை எடுத்துள்ள தீர்மானம்

Editorial   / 2020 ஏப்ரல் 28 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படை வீரர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் குறித்த வைரஸைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டை அவர்களே முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். 

அத்துடன், தற்போதைய நிலைமையை முகாமை செய்ய முடியுமெனவும் கடற்படை தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாகவே விடுமுறையில் சென்றவர்களை முகாம்களுக்கு அழைக்கும் பணியை முன்னெடுத்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் லுத்தினன் கமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றினால் 180க்கு மேற்பட்ட கடற்படை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X