2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கடல் அட்டைகளை பிடித்த மூவர் கைது

Freelancer   / 2023 செப்டெம்பர் 29 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த மூவர் வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மன்னாரை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடமைகளுடன் மூவரும் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இரவு நேரத்தில் பல படகுகள் சட்டவிரோதமாக அட்டை பிடிப்பதாக கடற்படையினரிடம் அண்மைக்காலமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயினும், பல படகுகள் தடைசெய்யப்பட்ட அட்டை தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X