2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கடவுச்சீட்டை வழங்க கட்டுப்பாடு நீக்கம்

Kanagaraj   / 2016 ஜூன் 02 , மு.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் காணப்பட்ட முரண்பாடு அல்லது வேறு அரசியல் காரணங்களுக்காக இலங்கையை விட்டு வெளியேற வேண்டியேற்பட்ட இலங்கைப் பிரஜைகளுக்கு, இலங்கைக் கடவுச்சீட்டை வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

மார்ச் 2011 முதல் விதிக்கப்பட்டிருந்த குறித்த பணிப்புரைகளே, நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் அகதிக் கோரிக்கை அல்லது புகலிடப் கோரிக்கை விடுத்து, அதைப் பெற்றுக் கொண்டவர்கள், குறித்த அகதி/புகலிட அந்தஸ்தைக் கைவிட்டாலொழிய, அவர்களுக்கான கடவுச்சீட்டுகளை வழங்குவதிலிருந்து தவிர்க்குமாறு, குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த பணிப்புரைகள், பிரஜைகளின் உரிமைகளின் மீறலாக அமைந்ததாகவும், கடினமான தருணங்களில் இலங்கையை விட்டு வெளியேறியிருந்த இலங்கையர்கள் பலருக்கு, இலங்கையின் பயண ஆவணமொன்றை வழங்குவதைக் கடினப்படுத்தியதாகவும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுத் தெரிவித்தது.

கடவுச்சீட்டொன்றை வைத்து, சுதந்திரமாக நடமாடவும், அவர்களது அரசியல் நம்பிக்கை எதுவாகவிருந்தாலும், பயணஞ்செய்வதற்குமான இலங்கைப் பிரஜைகள் அனைவரினது உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், இலங்கை முன்நிற்பதாக, அவ்வமைச்சின் அறிவித்தல் மேலும் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .