2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று (23) முதல் இந்த விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இருந்து தமது வெளிநாட்டு தொழில்வாய்ப்பு தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரர்கள் அதற்கான தமது ஆரம்பச் செயற்பாடுகளை நிறைவுசெய்த பின்னர், இந்த விசேட கருமபீடத்தில் ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தமது கடவுச்சீட்டை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X