2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

கடுவன்களுக்கு கருத்தடை

Mithuna   / 2024 ஜனவரி 17 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கருத்தடை திட்டத்தை வெகு விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர், “மாத்தளை மாவட்டத்தில் கடந்த சில காலங்களாக ஆண் குரங்குகள் அதிகமாக பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில், குறித்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன் விவசாய அமைச்சு இதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கையை பொருத்தவரை இதுவே ஆண் குரங்குகளுக்கு முதல்முறையாக கருத்தடை திட்டத்தை முன்னோடி திட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. இதனை மேற்கொள்வதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவப் பிரிவும் பேராதனை போதனா வைத்தியசாலையும் இணைந்து குரங்குகளின் கர்ப்பத்தைத் தடுப்பதற்காக 'லூப் கருத்தடை' எனப்படும் கருப்பையக சாதனத்தை (IUD) அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் அசோக தங்கொல்ல கடந்த வருடம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .