2026 மே 02, சனிக்கிழமை

கட்சி தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் தீர்மானம்

J.A. George   / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தல் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின் ஆராய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான முன்மொழிவு  மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனால் அமைச்சரவையில் நேற்று(14) முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில்,  2-3 ஆண்டுகளுக்கும் அதிகமாக தாமதமாகிவிட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவை எட்டுவதற்கு முன்னர் கட்சித் தலைவர்கள் மட்டத்தில் கலந்துரையாட முடிவு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .