2025 மே 02, வெள்ளிக்கிழமை

கட்டடம் தாழிறங்கியதால் சாரதிகளுக்கு எச்சரிக்கை

R.Maheshwary   / 2021 ஜூலை 13 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுகஸ்தோட்டை முச்சந்தியிலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்டு வந்த 5 மாடிக் கட்டடம் ஒன்று நேற்று (12) மாலை 5.30 மணியளவில் திடீரென தாழிறங்கியுள்ளது.

இதன் காரணமாக, கட்டுகஸ்தோட்டை- குருநாகல் வீதியில் மறு அறிவித்தல் வரை, கனரக வாகனங்கள் செலுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இக்கட்டடம் தாழிறங்கியதால், எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .