Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கட்சி சார்பில் பிரேரிக்கப்படும் பட்சத்தில் 25 இலட்சம் ரூபாய் கட்டுப்பணமும் சுயேட்சை வேட்பாளராயின் 30 இலட்சம் ரூபாய் கட்டுப்பணமும் செலுத்தும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
10 வருடங்களுக்கு மேல் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாயின் கட்டுப்பணத்தில் நான்கில் ஒரு பங்கை செலுத்துவது போதுமானதாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் 5,000 ரூபாய் கட்டுப்பணமும், சுயேட்சை வேட்பாளர் 7,500 ரூபாய் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் என கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago