Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் இருவரின் உருவ மாதிரிகளை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
இக்கொலைத் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் சாட்சியமளித்தவர்கள், வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய, பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவின் பொலிஸ் சித்திரகாரர்களினால் இவ்விரு சித்திரங்களும் தீட்டப்பட்டுள்ளன.
முதலாவது சித்திரம்
35 வயது மதிக்கத்தக்கவர், உயரம் 5 அடி 8அங்குலம், கண்கள் கபிலநிறம், மாநிறத் தோற்றம் கொண்டவர்.
இல.2 சந்தேகநபர்,
40 வயது மதிக்கத்தக்கவர், உயரம் 5 அடி 10 அங்குலம், பருமானான உடற்தோற்றங்கொண்ட பொது நிறமானவர்.
இவ்விரண்டு சந்தேகநபர்கள் தொடர்பிலும் சரியான தகவல்கள் தெரியுமாயின், 071-8591753, 071-8591770, 077-3291500 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்கமுடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி, சட்டத்தரணி ருவன் குணசேகர கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago