Freelancer / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூகத்தில் அடையாளம் காணப்படாத அதிகளவான கொரோனா நோயாளிகள் இருக்கக்கூடும் என்பதால், நாட்டில் மேலும் எழுமாறான பிசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமானது என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் செயலாளர் டொக்டர் கமல் ஏ பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
இந்த கண்டறியப்படாத நோயாளிகள் அறிகுறியற்றவர்கள் என்றும், அதனால் அவர்கள் சிகிச்சைக்காகவோ அல்லது பரிசோதனைக்காகவோ செல்வதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
"அறிகுறிகளைக் காட்டாத சமுதாயத்தில் கண்டறியப்படாத நோயாளிகள் இருப்பதால், தினசரி கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அறிக்கையிடப்படுவதை விட அதிகமாக உள்ளது என்பது தெளிவாகிறது," என்று அவர் வாதிட்டார்.
"எனவே, இதுபோன்ற நோயாளிகளைக் கண்டறியும் வகையில் மேலும் எழுமாறான பிசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம்," என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சுகாதார விதிகளைப் பின்பற்றத் தவறும் அளவுக்கு மக்கள் அலட்சியமாக உள்ளனர் என்றும் வருத்தம் தெரிவித்தார்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025