2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி; சந்தேகநபர் தப்பியோட்டம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-காஞ்சன குமார ஆரியதாச

கல்கிரியாகம, ஏழாம் குளக்கட்டுச் சந்தியில் வைத்து, இனந்தெரியாத நபர்களினால் கத்திக்குத்துக்கு இலக்காகி 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இக்கொலைச் சம்பவம், நேற்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர், புந்துகேஹின்ன, தேவஹுவ பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர் தப்பியோடியுள்ளதாகவும் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X