2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

”கொதித்தாறிய நீரை மட்டுமே பருக வேண்டும்”

S.Renuka   / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்  மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதால், இயலுமானவரை கொதித்தாறிய நீரையே அருந்துமாறும்  சிறிய குழந்தைகளுக்கும் கொதித்தாறிய நீரை மட்டுமே பருக வேண்டும்.

தற்போதுள்ள அனர்த்த நிலை காரணமாக, வீடுகளைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகும் இடங்கள் இருக்க வாய்ப்புள்ளதால், வீடுகளைச் சுத்தம் செய்யும்போது, நுளம்புகள் பெருகும் இடங்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அவ்வாறு செய்யாவிட்டால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் சமில் முத்துக்குட மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X