Editorial / 2026 ஜனவரி 16 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாக ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொலிஸாரும் எவ்வளவுதான் விழிப்பாக இருந்து சட்டம் - ஒழுங்கை கடைப்பிடித்து வந்தாலும், குற்ற சம்பவங்கள் தொடர்ந்தபடியே உள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ளது செங்கோடு புல்லன்விளை என்ற பகுதி.. இங்கு குடும்பத்துடன் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவரது செல்ல மகன் அபிஷேக்குக்கு 30 வயதாகிறது.
மகனை இன்ஜினியருக்கு படிக்க வைத்தார் சதீஷ்குமார். அதன்படியே சதீஷ் படித்து முடித்ததுமே துபாயில் வேலைக்கும் சென்று விட்டார். சில வருடங்கள் அங்கு வேலை பார்த்து வந்த நிலையில், சமீபத்தில்தான் சொந்த ஊருக்கு வந்தார். வேறு எந்த வேலைக்கும் இன்னும் செல்லவில்லை.
தற்போதும் சொந்த ஊரில்தான் இருந்து வருகிறார். அபிஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.அவரது மனைவி இப்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில், அபிஷுக்கும் புதுச்சேரியை சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் ஒரு நடன கலைஞர் ஆவார்.
அந்த பெண்ணுடன் பழக ஆரம்பித்ததில் இருந்தே, தன்னை பற்றின விவரங்களை மறைத்து விட்டார் அபிஷ். குறிப்பாக தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. விரைவில் திருமணம் செய்து கொள்வதாக அபிஷ் அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தைகள் கூறி நம்பிக்கை அளித்துள்ளார்.
இதற்கிடையே, அந்த பெண்ணுக்கு அபிஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அபிஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். ஆனால், அபிஷ் இதனை மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்துவிட்டார். அந்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அபிஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமானதை மறைத்து, பெண் நடன கலைஞரை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இன்ஜினியரை பொலிஸார் கைது செய்த சம்பவம், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரே சமயத்தில் காதலியும் கர்ப்பம், மனைவியும் கர்ப்பம் என்பதால் இந்த விவகாரத்தை மகளிர் பொலிஸார் இரு பெண்களின் நலனை கவனத்தில் கொண்டு மேற்கொண்டுள்ளனர்.
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago