2025 மே 05, திங்கட்கிழமை

கந்​தானையில் பதற்றம்: 120 மாணவிகள் அனுமதி

Editorial   / 2023 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவிகள் குழுவொன்று திடீரென சுகவீனமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, பாடசாலைகளை நோக்கி பெற்றோர் படையெடுத்தமையால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X