2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

கந்தசஷ்டி விரதம் நாளை ஆரம்பம்

Editorial   / 2025 ஒக்டோபர் 21 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வி.ரி. சகாதேவராஜா

இந்துக்களின் கந்த சஷ்டி விரதம்   புதன்கிழமை (22)  ஆரம்பமாகிறது.தொடர்ந்து ஆறு நாட்கள் விரதம்  அனுஷ்டித்து  ஆறாம் நாளாகிய 27 ஆம் திகதி திங்கட்கிழமை சூரசம்ஹாரம் இடம் பெறும். மறுநாள் 28 ஆம் திகதி செவ்வாய் கிழமையன்று பாரணை திருக்கல்யாணம் நடைபெறும்.

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில்  சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் வழமைபோல் புதன்கிழமை  (22)  ஆரம்பமாகிறது.

 ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் மற்றும்  ஆலயகுரு சிவசிறி அங்குசநாதக்குருக்கள் முன்னிலையில் விரதம் அனுஷ்ட்டிக்கப்படவிருக்கிறது.

வழமைக்கு மாறாக ஏராளமான பக்தர்கள் விரதத்தினை இம்முறை அனுஷ்டிக்க இருக்கின்றனர்.

இவ்வருடம் கந்தசஷ்டி விரதத்திற்கான சஷ்டித்திதி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு  03.20 க்குகூடி மறுநாள் 27 திங்கட்கிழமை ஆம் திகதி  பின்னிரவு 04.33 மணிக்கு கலைகிறது. விரதாதிகள்  28 ஆம் திகதி தமது விரதத்தை பாரணையுடன்  நிறைவு செய்து கொள்ளலாம் என்று பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .