Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 03 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட வெடிபொருட்கள், விசேட அதிரடிப் படையினரால் நேற்று (02) மீட்கப்பட்டுள்ளன.
குறிசுட்டகுளத்தை புனரமைப்பு செய்வதற்கான வேலைகள் இடம்பெற்று வந்தநிலையில், சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டு கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் , 15மோட்டார் செல்களையும், 6 ஆர்.பி.ஜி ரக செல்களையும் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நீதிமன்ற உத்தரவுடன் அப்பகுதியை ஆழப்படுத்தி இன்றயதினம் தேடுதல் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
8 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
57 minute ago
1 hours ago