2025 மே 10, சனிக்கிழமை

கனமழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு

Mithuna   / 2023 டிசெம்பர் 05 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

`மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. திங்கட்கிழமை (04) முழுவதும் பெய்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது. இதனால் மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.

இந் நிலையில், சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும்,  கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X