Editorial / 2026 மார்ச் 22 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வரவிருந்த இரு கச்சா எண்ணெய் கப்பல்கள் வந்து சேராத காரணத்தினால், உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தில் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) அன்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
கச்சா எண்ணெய் கிடைக்காத காரணத்தினால், சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படும் டீசல் மற்றும் பெற்றோல் அளவுகளில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார். இதன்படி:
சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் டீசல் அளவில் 30 சதவீதமும், பெற்றோல் அளவில் 20 முதல் 25 சதவீதமும் விநியோகிக்க முடியாத அபாயம் ஏற்பட்டுள்ளது.
சந்தையில் நிலவும் எரிபொருள் தேவையை ஈடுசெய்வதில் இந்தத் தட்டுப்பாடு நேரடிப் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
30 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago