2025 மே 22, வியாழக்கிழமை

கம்பஹா வர்த்தகர் கைது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கநகைகளை சிங்கப்பூரிலிருந்து கடத்த முற்பட்ட கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரொருவரை, இன்று காலை கைதுசெய்துள்ளதாக சுங்கத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

விஸ்கி போத்தல்கள் இருந்த பெட்டியொன்றுக்குள், 363 தங்கச் சங்கிலிகள் மற்றும் 7 கைச்சங்கிலிகள் என்பவற்றையே குறித்த நபர் நாட்டுக்குள் கடத்தமுயன்றுள்ளதாக தெரிவித்த சுங்க அதிகாரிகள், மேலதிக விசாரணைகளுக்காக அவரைத் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X