2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

குரோதஙகளுக்கு மத்தியில் நல்லவர்களும் உள்ளனர்

Editorial   / 2025 டிசெம்பர் 05 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்த அனர்த்தத்தினாலும் அழித்துவிட முடியாத மனிதாபிமானத்தை இந்த அனர்த்தத்தின் போது காண முடிகிறது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். உறவினர் அல்லாத, இதுவரை முகங்களைக் காணாத நபர்களுடைய வீட்டையும் கிணறுகளையும் சுத்தம் செய்வதற்காக ஹம்பாந்தோட்டையிலி ருந்து கண்டிக்கும் மாத்தறையில் இருந்து கண்டிக்கும் காலியிலிருந்து நுவரெலியா யாவுக்கும் சென்று தனது உறவுகளாகப் பார்த்து மனமுவந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மனிதாபிமான உதவிகளை எந்த பேரனர்த்தத்தாலும் அழிக்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இவ்வாறான அனர்த்தங்களின் போது மீட்புப் பணிகளுக்கான மிகக் குறைந்த விமானங்கள்,உபகரணங்களே எம்மிடம் உள்ளன. எனினும் இந்த அனர்த்தத்தை கேள்விப்பட்டவுடன் எமது அயல்நாடுகள் உட்பட அனைத்து சர்வதேச நாடுகளும் விமானங்கள், மருந்துகள், மீட்புப் பணியாளர்கள், அத்தியாவசியப் பொருட்கள் என பாரிய உதவிகளை செய்தமைக்கு நன்றி கூற வேண்டும். அதேபோன்று பாதிப்பில் அகப்பட்டிருந்த மக்களை தமது உயிரைப் பணயம் வைத்து மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட எமது விமானப்படை உள்ளிட்ட முப்படையினர் மற்றும் பொலிசாருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் எதிர்க்கட்சியில் சிலர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது. அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்தியது தொடர்பில் அந்த கேள்விகள் எழுப்பப்பட்டன. அவசரகாலச் சட்டம் முறையாகவே அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அது முறையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று பாராளுமன்ற சிறப்புரிமையை கவசமாக வைத்துக் கொண்டு சிலர் தவறான தகவல்களை பாராளுமன்றத்தில் தெரிவித்தனர். இந்த அனர்த்தத்தின் போது கம்பளையில் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக எதிர்க் கட்சி எம்பி ஒருவர் இங்கு தெரிவித்தார். வெளியில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் வழக்குத் தொடர முடியும். அத்துடன் அரச அதிகாரிகள் பயத்துடன் செயற்படுவதாக சிலர் தெரிவித்தார்கள். அவ்வாறு கிடையாது. நேர்மையாக செயல்படும் அனைத்து அரச அதிகாரிகளையும் அரசாங்கம் பாதுகாக்கும். அவர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்தே அவர்களுக்கு அரசாங்கம் நிதி வழங்கியுள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். தற்போது இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு வீட்டு வசதிகள் உட்பட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. பொருளாதார பிரச்சனைகள் எமக்கு உள்ள போதும் நாம் மிகுந்த கவனத்துடன் முகாமைத்துவத்துடன் அதனை முன்னெடுத்து வருகின்றோம். அரசாங்கம் கவிழும் என பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எதிர்பார்ப்புடன் இருந்தவர்களும் உள்ளனர். அவ்வாறானவர்கள் தொடர்பில் நாம் வெட்கப்பட வேண்டும். குரோத மனப்பான்மையுடன் செயற்பட்ட சிலருக்கு மத்தியில் நல்லவர்களும் உள்ளனர் அவர்களுக்கு எமது நன்றிகள் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X